TNPSC Thervupettagam

ஆக்ஸ்பாம் அமைப்பின் அறிக்கை

August 8 , 2021 1079 days 494 0
  • ஆக்ஸ்பாம் அமைப்பானது “Tightening the Net” என்று தலைப்பிடப்பட்ட புதிய அறிக்கை ஒன்றினை சமீபத்தில் வெளியிட்டது.
  • பல நாடுகளால் அறிவிக்கப்பட்ட நிகர-சுழியக் கார்பன் இலக்குகள் ஆனது கார்பன் உமிழ்வுகளைக் குறைப்பதற்கான அவற்றின் முன்னுரிமையிலிருந்து விலகச் செய்வதற்கான ஆபத்து மிக்க மாற்றாக இருக்கலாம் என இந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.
  • 2050 ஆம் ஆண்டுக்குள் உலகின் அதிகப்படியான கார்பன் உமிழ்வினை நீக்குவதற்கு சுமார் 1.6 பில்லியன் ஹெக்டேர் அளவிலான காடுகள் தேவை என இந்த அறிக்கை கூறுகிறது.
  • உலக வெப்பமயமாதலை 1.5°C என்ற அளவிற்குக் கீழ் குறைப்பதற்கும், பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் மீள முடியாத சேதங்களைத் தடுப்பதற்கும் 2030 ஆம் ஆண்டுக்குள் உலகின் கார்பன் உமிழ்வினை 2010 ஆம் ஆண்டில் இருந்த நிலையிலிருந்து 45% வரை குறைக்க வேண்டும்.
  • தற்போது உமிழ்வினைக் குறைக்கத் திட்டமிட்டுள்ள நாடுகளின் முயற்சியானது 2030 ஆம் ஆண்டுக்குள் 1% குறைப்பினை மட்டுமே நல்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்