‘பருவநிலை சமத்துவம்: 99 சதவீதத்திற்கான ஒரு கிரகம்’ என்ற தலைப்பிலான ஆக்ஸ்பாம் அறிக்கையானது ஸ்டாக்ஹோம் சுற்றுச்சூழல் நிறுவனம் (SEI) நடத்திய ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது.
உலகில் சுமார் 1% பெரும் பணக்காரர்களின் கார்பன் உமிழ்வு ஆனது, உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு அல்லது ஐந்து பில்லியன் மக்களுக்குச் சமம்.
உலகளவில் 77 மில்லியன் பணக்காரர்களால் ஏற்படும் கார்பன் உமிழ்வு ஆனது, 2019 ஆம் ஆண்டில் உலகளவில் மொத்த CO2 உமிழ்வில் 16% ஆக உயர்ந்துள்ளது.
பணக்காரர்கள் வெளியிடும் அளவுக்கதிகமான உமிழ்வுகள் மட்டும், வெப்பத்தினால் ஏற்படும் 1.3 மில்லியன் இறப்புகளை ஏற்படுத்த போதுமானது.
இந்த 1% பணக்காரர்களின் வருமானத்தின் மீது 60% வரி விதிப்பது, ஐக்கியப் பேரரசின் மொத்த உமிழ்வை விட அதிகமான அளவு உமிழ்வைக் குறைக்க உதவும்.
மேலும், புதைபடிவ எரிபொருட்களிலிருந்துப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களுக்கு மாறுவதற்கு ஆண்டிற்கு 6.4 டிரில்லியன் டாலர் என்ற அளவிற்கு நிதி திரட்டுவது இந்த இலக்கினை அடைய பங்களிக்கும்.
ஓராண்டில் பணக்கார பில்லியனர்கள் வெளியிடும் அளவு கார்பனை உற்பத்தி செய்ய கீழ்மட்டத்தில் உள்ள 99 சதவீத மக்களில் ஒருவருக்கு சுமார் 1,500 ஆண்டுகள் ஆகும்.