TNPSC Thervupettagam

ஆக்ஸ்பாம் அறிக்கையும் இந்தியாவும்

January 24 , 2018 2350 days 850 0
  • “வேலைக்கு வெகுமதி ஆனால் சொத்தில் அல்ல” (Reward work, not wealth) என்ற தலைப்பில் சர்வதேச உரிமைகள் அமைப்பான (International rights group) ஆக்ஸ்பாம் அமைப்பு  ஆக்ஸ்பாம் அறிக்கை ஒன்றை   வெளியிடப்பட்டுள்ளது.
  • 2017 ஆம் ஆண்டில் நாட்டில் உருவான மொத்த 73 சதவீத வளத்தில், அதாவது சொத்துகள் அனைத்தும் 1 சதவீத பணக்காரர்களிடம் குவிந்துள்ளது,
  • 2017 ஆண்டில் இந்தியாவில் ஒரு சதவீத பணக்காரர்களின் சொத்து மதிப்பு ரூ. 20.9 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இத்தொகையானது மத்திய அரசின் 2017-18 ஆம் நிதி ஆண்டிற்கான பொது பட்ஜெட்டின் தொகைக்கு இணையானதாகும்.
  • இந்திய மக்கள் தொகையுள் ஏழைகளின் எண்ணிக்கையில் பாதியைக் கொண்ட 67 கோடி இந்தியர்களின் வருமானம் கடந்த ஆண்டு வெறும் ஒரு சதவீதம் மட்டும் அதிகரித்துள்ளது. இது வளர்ந்து வரும் வருமான சமமின்மை (Income Inequality) குறித்து வருந்தத்தக்க அம்சமாகும்.
  • 2017-ல் இந்தியாவில் புதிதாக 17 கோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளனர். இதன் மூலம் நாட்டிலுள்ள பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது.
  • உலகளவில் 2017 ஆம் ஆண்டு உருவான 82 சதவீத வளமானது ஒரு சதவீத உலக பணக்காரர்களின் கைவசத்தில் உள்ளது.
  • இத்தகு வளத்திலிருந்து, உலகின் மொத்த ஏழை மக்களின் மக்கள் தொகையில் பாதியளவுள்ள 7 மில்லியன் மக்களில் எவரும்  தங்களது வருமானத்தில் எத்தகு அதிகரிப்பையும் காணவில்லை என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • ஆக்ஸ்பாம் அறிக்கையின் தயாரிப்பு மற்றும் வெளியிடலுக்கு பயன்பட்ட மூல தரவு ஆதாரங்களாவன:
    • போர்ப்ஸ் கோடீஸ்வரர்கள் பட்டியல்- 2017
    • உலக வங்கியின் தரவுகள்,
    • கிரெடிட் சுய்செஸ் (Credit Suisse ) உலகளாவிய வள தரவு புத்தகத்தின்   கடந்த ஆண்டுப் பதிப்பு.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்