TNPSC Thervupettagam

ஆக்ஸ்பாம் நிறுவனத்தின் சமத்துவமின்மை அறிக்கை 2024

January 18 , 2024 183 days 301 0
  • இந்த அறிக்கையின் படி பில்லியனர்கள் தற்போது உலகின் 10 பெரிய நிறுவனங்களில் ஏழு நிறுவனங்களை இயக்கி வருகின்றனர் அல்லது முக்கியப் பங்குதாரர்களாக உள்ளனர்.
  • 2020 ஆம் ஆண்டு முதல் பில்லியனர்கள் 3.3 டிரில்லியன் டாலர் அளவில் மேலும் பணக்காரர்களாகியுள்ளனர்.
  • 2020 ஆம் ஆண்டிலிருந்து ஐந்து பெரும் பணக்காரர்களின் செல்வம் உண்மை மதிப்பில் 114 சதவீதம் உயர்ந்துள்ளது.
  • 148 உயர்நிலை நிறுவனங்கள் 1.8 டிரில்லியன் டாலர் லாபம் ஈட்டியுள்ள நிலையில் இது மூன்றாண்டு சராசரியில் 52 சதவீதம் உயர்ந்துள்ளது.
  • பத்தாண்டுகளில் உலக நாடுகள் அதன் முதல் டிரில்லியனரைக் காணக் கூடும்,  ஆனால் வறுமையை முற்றிலுமாக ஒழிக்க 229 ஆண்டுகள் ஆகும்.
  • உலக அளவில் பெண்களை விட ஆண்கள் 105 டிரில்லியன் டாலர்கள் செல்வ வளம் அதிகம் கொண்டுள்ளனர்.
  • உலகெங்கிலும் உள்ள 791 மில்லியன் தொழிலாளர்கள் தங்கள் ஊதியமானது பண வீக்கத்தின் வேகத்திற்கு ஏற்ப அமையாததைக் கண்டுள்ளனர்.
  • இதன் விளைவாக கடந்த இரண்டு ஆண்டுகளில் 1.5 டிரில்லியன் டாலர் கூட்டு இழப்பு ஏற்பட்டது.
  • உலகின் 1,600 பெரிய நிறுவனங்களில், வெறும் 0.4% நிறுவனங்கள் மட்டுமே தொழிலாளர்களுக்கு வாழ்வாதார ஊதியம் வழங்குவதற்கு உறுதியளித்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்