2019 ஆண்டிற்கான ஆக்ஸ்பாம் வருடாந்திர செல்வ நிலை ஆய்வறிக்கையானது டாவோஸில் உலகப் பொருளாதார மன்றத்தின் துவக்கத்தை குறிக்கும் பொருட்டு வெளியிடப்பட்டுள்ளது.
உலகில் வறுமையில் உள்ளவர்களில் பாதியளவுத் தொகையான 3.8 பில்லியன் மக்களின் சொத்துக்களுக்கு சமமான சொத்துக்களை 26 செல்வந்தர்கள் கொண்டுள்ளனர்.
இந்த செல்வந்தர்கள் 2018-ல் மிக பணக்காரர்களாக உயர்ந்தும் ஏழைகள் மிகவும் ஏழைகளாகவும் மாறியுள்ளனர். மேலும் இந்த மிகப்பெரிய இடைவெளியானது வறுமைக்கு எதிரான போராட்டத்தைத் தடுக்கின்றது.
கடந்த 10 ஆண்டுகளில் பில்லியனர்களின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்துள்ளது.
2017-2018 ஆம் ஆண்டுகளில் ஒவ்வொரு 2 நாட்களுக்கும் ஒரு புதிய கோடீஸ்வரர் உருவாக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் முன்னணி 1% பணக்காரர்கள் 39% அளவில் அதிக செல்வந்தராகியுள்ளனர். ஆனால் கீழ்நிலையில் உள்ள பாதிக்கும் மேலான மக்கள்தொகைக்கு வெறும் 3% அளவிலேயே செல்வம் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் உள்ள பில்லியனர்களின் செல்வமானது கடந்த ஆண்டில் நாளொன்றுக்கு 2200 கோடி ரூபாய் அளவிற்கு அதிகரித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் 10 சதவிகிதத்தினர் ஒட்டுமொத்த நாட்டின் வளத்தில் 77.4 சதவிகிதத்தைக் கொண்டுள்ளனர்.