TNPSC Thervupettagam

ஆக்ஸ்போர்டு அகராதியில் இணைக்கப்பட்டுள்ள புதிய சொற்கள்

January 27 , 2020 1636 days 741 0
  • ஆக்ஸ்போர்டு மேம்பட்ட கற்றல் அகராதியின் சமீபத்திய பதிப்பில் இணைக்கப் பட்டுள்ள 26 புதிய இந்திய – ஆங்கிலச் சொற்களில் ஆதார், ஹர்த்தால், தாபா மற்றும் ஷாதி ஆகியவை அடங்கியுள்ளன.
  • 86,000 சொற்கள் கொண்டுள்ள ஆக்ஸ்போர்டு அகராதியின் 10வது பதிப்பில் செய்யப் பட்டுள்ள இந்தப் புதிய இணைத்தல்கள் மூலம் இந்திய – ஆங்கிலச் சொற்களின் எண்ணிக்கையானது 384 ஆக மாறியுள்ளது.
  • இந்த அகராதியானது 2019 ஆம் ஆண்டுக்கான வார்த்தையாக 'காலநிலை அவசரநிலை' என்ற வார்த்தையைத் தேர்வு செய்துள்ளது.
  • ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி என்பது ஆங்கில மொழியின் முதன்மையான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அகராதி ஆகும். இது ஐக்கிய இராச்சியத்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக அச்சகத்தினால் வெளியிடப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்