TNPSC Thervupettagam

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மலேரியா தடுப்பூசி

April 28 , 2023 579 days 265 0
  • ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் ஒரு புதிய மலேரியா தடுப்பு மருந்திற்கு ஒப்புதல் அளித்த உலகின் முதல் நாடாக கானா மாறியுள்ளது.
  • R21/Matrix-M என்ற இந்தத் தடுப்பு மருந்தானது, உலக சுகாதார அமைப்பின் 75% செயல் திறன் என்ற இலக்கினையும் விஞ்சியுள்ளது.
  • கானாவின் உணவு மற்றும் மருந்து ஆணையமானது, இதனை 5 முதல் 36 மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்குப் பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது.
  • அந்த நாட்டில் மலேரியப் பாதிப்பினால் அதிகம் உயிரிழப்பிற்கு உள்ளாகக் கூடிய ஒரு அபாயம் அதிகம் உள்ள ஒரு குழுவாக இவர்கள் உள்ளனர்.
  • கானாவில், இந்த நோய் அதிகளவில் பரவியும், நீண்ட காலமாகவும் காணப்படுகின்ற ஒன்றாகும் என்பதோடு, 5.3 மில்லியன் பாதிப்புகள் மற்றும் 12,500 இறப்புகள் அந்நாட்டில் பதிவு செய்யப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்