TNPSC Thervupettagam

ஆக்ஸ்போர்டு பொருளாதார அமைப்பின் உலகளாவிய நகரங்களின் குறியீடு 2024

May 26 , 2024 181 days 223 0
  • ஆக்ஸ்போர்டு குறியீட்டுப் பட்டியலில் நியூயார்க் முதலிடத்திலும், இலண்டன், சான் ஜோஸ், டோக்கியோ மற்றும் ஜப்பான் ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
  • இந்தக் குறியீட்டின் முதல் 50 இடங்களில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள நகரங்கள் முன்னணி இடங்களைப் பெற்றுள்ளன.
  • இந்தக் குறியீட்டில் இந்திய நகரங்களில் டெல்லி முன்னணி இடத்தைப் பிடித்துள்ளது.
  • தேசியத் தலைநகரம் ஆனது, உலகளாவியப் பட்டியலில் 350வது இடத்தில் உள்ளது.
  • இந்தப் பட்டியலில் பெங்களூரு, மும்பை மற்றும் சென்னை உட்பட பல இந்திய நகரங்களும் இடம் பெற்றுள்ளன.
  • இருப்பினும், எந்த ஒரு இந்திய நகரமும் முதல் 300 இடங்களுக்குள் இடம் பெறவில்லை.
  • இந்தியாவில் பெங்களூரு 411, மும்பை 427, சென்னை 472, கொச்சி 521, கொல்கத்தா 528, புனே 534, திருச்சூர் 550, ஹைதராபாத் 564 மற்றும் கோழிக்கோடு 580 ஆகிய இடங்களில் இடம் பெற்றுள்ளன.
  • திருச்சிராப்பள்ளி (634), கோயம்புத்தூர் (669), மதுரை (691), வேலூர் (729) மற்றும் சேலம் (767) தமிழகத்திலிருந்து இடம் பெற்றுள்ள நகரங்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்