கோரக்பூர் வனப் பிரிவில் இந்தியாவின் முதல் ஆசிய அரசக் கழுகுகளுக்கான வளங் காப்பு மற்றும் இனப்பெருக்க மையம் திறக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஜடாயு வளங்காப்பு மற்றும் இனப்பெருக்க மையம் என பெயரிடப்பட்டுள்ளது.
2007 ஆம் ஆண்டு முதல் IUCN செந்நிறப் பட்டியலில் மிகவும் அருகி வரும் இனமாக பட்டியலிடப் பட்டுள்ள இந்த இனங்களின் எண்ணிக்கையினை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆறு கழுகுகள் (ஆண் மற்றும் பெண்) இந்த மையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இச்செயல் திட்டத்தின்படி, அடுத்த 8 முதல் 10 ஆண்டுகளில் 40 இணைக் கழுகுகளை இந்த மையத்திலிருந்து விடுவிப்பதே இதன் இலக்காகும்.