TNPSC Thervupettagam

ஆசிய ஆற்றல் மாற்ற முன்னெடுப்பு (AETI)

March 7 , 2023 503 days 228 0
  • ஜப்பானின் 'ஆசிய நாடுகளின் ஆற்றல் மாற்ற முன்னெடுப்பினை' விரிவுபடுத்துவதன் மூலம் தூய்மையான ஆற்றல் மாற்றத்தினை நோக்கியப் பாதையில் இந்தியாவிற்கு உதவி வழங்க ஜப்பான் திட்டமிட்டுள்ளது.
  • ஜப்பான் நாட்டின் ஆசிய ஆற்றல் மாற்ற முன்னெடுப்பானது (AETI) 2021 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டது.
  • இந்த முன்னெடுப்பானது ஆரம்பத்தில் நிகரச் சுழிய உமிழ்வு என்ற ஒரு நிலையினை அடைவதற்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN) சார்ந்த சில நாடுகளுக்கு ஆதரவு அளித்தது.
  • 2070 ஆம் ஆண்டிற்குள் நிகரச் சுழிய உமிழ்வு நிலையினை அடைவதற்கான இலட்சிய மிக்க இலக்கினை இந்தியா நிர்ணயித்துள்ளது.
  • ஜப்பான் நாடானது 2050 ஆம் ஆண்டிற்குள் நிகரச் சுழிய நிலையினை அடைவதென்ற இலக்கினை நிர்ணயித்துள்ளது.
  • உமிழ்வினைக் குறைக்க உதவும் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் பொருளாதார மாதிரிகளை இந்த நாடுகள் பயன்படுத்துகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்