TNPSC Thervupettagam

ஆசிய இரயில் பாதை

May 25 , 2019 1917 days 621 0
  • இந்தியாவில் இரயில் பாதைகளை மின்மயமாக்கும் ஒப்பந்தம் ஒன்றில் ஆசிய வளர்ச்சி வங்கியானது (ADB - Asian Development Bank) கையெழுத்திட்டுள்ளது.
  • இந்த ஒப்பந்தத்தின்படி ABD வங்கியானது 750 மில்லியன் டாலர்களை நீண்ட கால நிதியாக இந்திய இரயில்வே நிதியியல் கழகத்திற்கு (IRFC - Indian Railway Finance Corporation) வழங்கவுள்ளது.
  • ADB வங்கியானது தனது உறுப்பு நாடுகளுள் ஒரு நாட்டு அரசாங்கத்தின் உத்தரவாதம் இல்லாமல் அந்நாட்டில் வழங்கும் மிகப்பெரும் கடன் இதுவாகும்.
இந்திய இரயில்வே நிதியியல் கழகம்
  • இந்திய இரயில்வே நிதியியல் கழகமானது (IRFC) 1986 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
  • இது இரயில்வே சேவைகளை விரிவுபடுத்துவதற்காக நிதி மூலங்களை உருவாக்குகின்றது.
  • இது 1997 ஆம் ஆண்டில் சந்தையிலிருந்து கடன் வாங்கத் தொடங்கியது.
  • இது நிதிப் பத்திரங்களின் மூலம், வங்கிகள் மற்றும் நிதியியல் நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து நிதியைப் பெறுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்