ஜகர்த்தாவில் நடைபெற்ற ஆசிய இளநிலை பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பின் முதல் போட்டியில் இந்தோனேசியாவின் முதன்மையான வீரரான கன்லாவுத் வித்தித்சரனை வீழ்த்தி இந்திய பாட்மிண்டன் வீரர் லக்ஷயா சென் தங்கப் பதக்கத்தினை வென்றுள்ளார்.
ஆசிய இளநிலை பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கத்தினை வென்ற மூன்றாவது இந்திய பூப்பந்தாட்ட வீரர் இவர் ஆவார்.
மறைந்த கௌதம் தாக்கர் (1965) மற்றும் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற P.V.சிந்து (2012) ஆகியோரே முந்தைய வெற்றியாளர்கள் ஆவர்.