ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் மூன்றாவது வருடாந்திர சந்திப்பு
June 6 , 2018 2368 days 742 0
ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (Asian Infrastructure Investment Bank -AIIB) 3-வது வருடாந்திர சந்திப்பிற்கான முன் நடத்து நிகழ்வாக “தண்ணீர் மற்றும் தூய்மையின்” (Water and Sanitation) மீது இருநாள் கருப்பொருளுடைய கருத்தரங்கு (Thematic Seminar) புனேவில் நடைபெற்றது.
ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, பிக்கி அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து அறிவுசார் பங்களிப்பாளராக (Knowledge Partner) வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்போடு (Research and Information System -RIS) கூட்டிணைந்து மத்திய நிதி அமைச்சகத்தால் இந்தக் கருத்தரங்கு நடத்தப்பட்டது.
2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மும்பையில் நடைபெற உள்ள ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் 3வது வருடாந்திர சந்திப்பிற்கான முன் நடத்து நிகழ்வாக மத்திய நிதி அமைச்சகத்தால் நடத்தப்படும் எட்டு நிகழ்ச்சிகளுள் இந்தக் கருத்தரங்கும் ஒன்றாகும்.
தண்ணீர் மேலாண்மை தொடர்பாக இந்திய அரசானது சுவாஜல் (Swajal) எனும் திட்டத்தை துவங்கியுள்ளது.
இத்திட்டமானது ஊரகப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஒருங்கிணைந்த முறையில் போதுமான மற்றும் நீடித்த அளவிலான குடிநீரை வழங்குவதற்கான சமுதாய வழிநடத்துக் குடிநீர் திட்டமாகும்.