ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி – வருடாந்திர சந்திப்பு
October 29 , 2021 1124 days 541 0
மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் 6வது வருடாந்திரச் சந்திப்பில் பங்கேற்று உள்ளார்.
இந்தச் சந்திப்பின் கருத்துரு, “இன்றைய முதலீடு நாளைய மாற்றம்” என்பதாகும்.
இந்த ஆண்டின் சந்திப்பானது ஐக்கிய அரபு அமீரக அரசுடன் இணைந்து ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி தொடர்பான முக்கிய விஷயங்கள் மற்றும் அதன் எதிர்கால நோக்கம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதே இந்த வருடாந்திரச் சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.
இந்திய நிதித் துறை அமைச்சர் “கோவிட்-19 நெருக்கடி மற்றும் கோவிட்-19 தொற்றிற்குப் பிந்தைய ஆதரவு” என்ற கருத்துரு பற்றிய தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.