சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகமானது ஆசிய சிங்கங்கள் பாதுகாப்புத் திட்டத்தைத் தொடங்கி இருக்கின்றது.
இத்திட்டத்தின் குறிக்கோளானது உலகில் மிக நீண்ட காலமாக சுதந்திரமாக வாழும் ஆசிய சிங்கங்களையும் அது தொடர்புடைய சுற்றுச் சூழலியலையும் பாதுகாப்பதற்காக பணி செய்வது ஆகும்.
இது மத்திய அரசால் நிதியுதவி வழங்கப்படும் திட்டமான வனவிலங்கு வாழ்விட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நிதியளிக்கப்படும்.
இதன் செலவானது, 60: 40 என்ற விகிதத்தில் மத்திய மற்றும் மாநில அரசால் பகிர்ந்து கொள்ளப்படும்.
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் மட்டுமே வாழ்ந்து வரும் ஆசிய சிங்கங்களானது IUCN-ன் (International Union for Conservation of Nature) சிவப்பு பட்டியலில் ‘அழிந்து வரும் இனமாக’ வகைப்படுத்தப்பட்டுள்ளது.