ஜப்பானில் நடைபெற்ற 2018-ஆம் ஆண்டின் ஆசிய ஜீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதியில் இந்தியத் தடகள வீரர்கள் ஓர் தங்கம் உட்பட நான்கு பதக்கங்களை வென்றுள்ளனர்.
போட்டியின் துவக்க நாளன்று இந்திய தடகள வீரரான ஆஷிஸ் ஜக்ஹால் ஆண்களுக்கான சங்கிலி குண்டு எறிதல் (Hammer throw event) போட்டியில்86 மீட்டர் தூரத்திற்கு சங்கிலி குண்டினை வீசி தேசிய ஜீனியர் அளவில் சாதனையைப் படைத்து தங்கப் பதக்கம் வெல்ல வழி கோலினார்.
ஆண்களுக்கான சங்கிலி குண்டு எறிதல் போட்டிப் பிரிவில் தம்னீத் சிங் வெள்ளிப் வென்றுள்ளார்.
மேலும் பிரியதர்ஷினி சுரேஷ் மற்றும் பூனம் சோனுனே ஆகியோர் இருவரும் பெண்களுக்கான மும்முறை நீளம் தாண்டுதல் (Triple jump) மற்றும் பெண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டத்தில் முறையே வெண்கலப் பதக்கத்தினை வென்றுள்ளனர்.