ஆசிய நாடுகளுக்கான திடீர் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை வழங்குவதற்கான மாதிரி
July 30 , 2018 2314 days 659 0
உலக வளிமண்டலவியல் அமைப்பானது (World Meteorological Organization - WMO) வியட்நாம், இலங்கை, மியான்மர் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு வெள்ளப்பெருக்கு பற்றிய எச்சரிக்கைகளை முன்கூட்டியே அளிப்பதற்கான திருத்தியமைக்கப்பட்ட மாதிரியை உருவாக்குவதற்கான முகவையாக இந்தியாவை நியமித்துள்ளது.
இம்மாதிரி திடீர் வெள்ளப்பெருக்கு வழிகாட்டுதல் அமைப்பு என்று அழைக்கப்படும்.
புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இந்திய வளிமண்டலவியல் துறை (Indian Meteorological Department - IMD) இந்த வானிலை மாதிரியினை அமைப்பதற்கு பணியாற்றும்.
அமெரிக்காவினால் உருவாக்கப்பட்டு WMO-க்கு வழங்கப்பட்ட திருத்தியமைக்கப்பட்ட இம்மாதிரி திடீர் வெள்ளப்பெருக்கு பற்றிய எச்சரிக்கையினை 6 மணி நேரத்திற்கு முன்பாகவே வழங்கும்.
இந்த முன் அறிவிப்பு மாதிரியின் மூலம் பயன்பெறும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தானும் ஒன்றாகும். ஆனால் பாகிஸ்தான் இதில் பங்குபெற மறுத்துவிட்டது.