TNPSC Thervupettagam

ஆசிய நீர்ப்பறவைகள் கணக்கெடுப்பு 2023

February 8 , 2023 529 days 267 0
  • சர்வதேச நீர்ப் பறவைகள் கணக்கெடுப்பு என்பது 143 நாடுகளில் உள்ள சதுப்பு நிலங்களில் காணப்படும் நீர்ப்பறவைகளின் எண்ணிக்கை பற்றியத் தகவல்களைச் சேகரிக்கும் ஒரு கண்காணிப்புத் திட்டமாகும்.
  • ஒவ்வோர் ஆண்டின் குளிர்காலத்தின் நடுப்பகுதியில் மேற்கொள்ளப்படும் ஆசிய நீர்ப் பறவைகள் கணக்கெடுப்பின் கீழான இந்த கண்காணிப்புத் திட்டத்தின் ஓர் அங்கமாக இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.
  • இது உலகளவிலான ஈரநிலங்கள் மற்றும் நீர்ப் பறவைகளின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மையை ஆதரிக்கும் குடிமக்கள்-அறிவியல் சார்ந்த ஒரு திட்டமாகும்.
  • இந்தக் கணக்கெடுப்பு குறித்த தகவல்கள் eBird செயலியில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • கேரளாவின் ஆலப்புழா என்ற பகுதிக்கு வருகை தரும் சில புலம்பெயர்ந்த நீர்ப் பறவைகளின் எண்ணிக்கையானது, குறிப்பாக வாத்து இனங்களின் எண்ணிக்கை என்பது குறைந்து வருவதை இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
  • முந்தைய ஆய்வுகளில் காணப்பட்ட தட்டைவாயன் வாத்து எனப்படும் நார்தர்ன் ஷோவலர், கிளுவை மற்றும் நாமத்தலை வாத்து போன்ற வாத்து இனங்கள் இந்த முறை இங்கு முற்றிலும் காணப் படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்