TNPSC Thervupettagam

ஆசிய-பசிபிக் தனிப்பயனாக்கப்பட்ட சுகாதாரக் குறியீடு

February 7 , 2021 1387 days 606 0
  • இதைப் பொருளாதாரப் புலனாய்வுப் பிரிவு என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.
  • ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் 11 சுகாதார அமைப்புகளின் தனிப்பயனாக்கப்பட்ட சுகாதாரச் சேவையை ஏற்றுக் கொள்வதற்கான தயார்நிலையை இந்தக் குறியீடு அளவிடும்.
  • மதிப்பீடு செய்யப்பட்ட சுகாதார அமைப்புகளில் இந்தியா, சீனா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, மலேசியா, தைவான், ஜப்பான், தாய்லாந்து, இந்தோனேசியா, தென் கொரியா மற்றும் நியூசிலாந்து ஆகியவை அடங்கும்.
  • இந்தப் பட்டியலில் சிங்கப்பூர் சிறந்து விளங்குகிறது.
  • தைவான் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
  • ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முறையே இந்தக் குறியீட்டின் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் உள்ளன.
  • இந்தியா 10வது இடத்தில் உள்ளது.
  • இந்தோனேசியாவானது இறுதியாக 11வது இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்