TNPSC Thervupettagam

ஆசிய-பசிபிக் பேரிடர் அறிக்கை 2024

November 8 , 2024 21 days 84 0
  • UNDRR ஆனது பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரில் 2024 ஆம் ஆண்டு பேரிடர் அபாயக் குறைப்பு (APMCDRR) தொடர்பான ஆசிய-பசிபிக் அமைச்சர்கள் மாநாட்டை நடத்துகிறது.
  • "ஆசியா-பசிபிக் பேரிடர் அறிக்கை 2024" கிழக்கு மற்றும் வடகிழக்கு ஆசியாவில் மாறி வரும் பேரிடர் நெகிழ் திறனில் கவனம் செலுத்துகிறது.
  • 1970 முதல் 2024 ஆம் ஆண்டு வரை ஏற்பட்ட பேரழிவுகள் ஆனது சுமார் அரை மில்லியன் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.
  • இது சுமார் 3 பில்லியன் மக்களைப் பாதித்தது மற்றும் கிழக்கு மற்றும் வடகிழக்கு ஆசியாவில் சுமார் 2 டிரில்லியன் டாலர் மதிப்பிலான சேதத்தை ஏற்படுத்தியது.
  • குறிப்பாக வடக்கு மற்றும் மேற்கு சீனாவில் ஏற்படும் சுமார் 1.5 டிகிரி செல்சியஸ் முதல் 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை  உயர்வு வறட்சி ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்பதோடு இது மேற்கு சீனாவுக்கும் பரவி மேலும் தீவிரமடையும்.
  • சீனாவானது 450,000க்கும் அதிகமான உயிரிழப்புகளுடன் துணைப் பிராந்தியத்தில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகளைப் பதிவு செய்துள்ளது என்ற நிலையில்  அதனை தொடர்ந்து சுமார் 32,000க்கும் அதிகமான உயிரிழப்புகளுடன் ஜப்பான் இடம் பெற்றுள்ளது.
  • கிழக்கு மற்றும் வடகிழக்கு ஆசியாவில், முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள் ஆனது ஆண்டிற்கு 107.5 பில்லியன் முதல் 161.3 பில்லியன் டாலர் வரையிலான இழப்புகளைத் தடுக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்