UNDRR ஆனது பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரில் 2024 ஆம் ஆண்டு பேரிடர் அபாயக் குறைப்பு (APMCDRR) தொடர்பான ஆசிய-பசிபிக் அமைச்சர்கள் மாநாட்டை நடத்துகிறது.
"ஆசியா-பசிபிக் பேரிடர் அறிக்கை 2024" கிழக்கு மற்றும் வடகிழக்கு ஆசியாவில் மாறி வரும் பேரிடர் நெகிழ் திறனில் கவனம் செலுத்துகிறது.
1970 முதல் 2024 ஆம் ஆண்டு வரை ஏற்பட்ட பேரழிவுகள் ஆனது சுமார் அரை மில்லியன் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.
இது சுமார் 3 பில்லியன் மக்களைப் பாதித்தது மற்றும் கிழக்கு மற்றும் வடகிழக்கு ஆசியாவில் சுமார் 2 டிரில்லியன் டாலர் மதிப்பிலான சேதத்தை ஏற்படுத்தியது.
குறிப்பாக வடக்கு மற்றும் மேற்கு சீனாவில் ஏற்படும் சுமார் 1.5 டிகிரி செல்சியஸ் முதல் 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்வு வறட்சி ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் என்பதோடு இது மேற்கு சீனாவுக்கும் பரவி மேலும் தீவிரமடையும்.
சீனாவானது 450,000க்கும் அதிகமான உயிரிழப்புகளுடன் துணைப் பிராந்தியத்தில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகளைப் பதிவு செய்துள்ளது என்ற நிலையில் அதனை தொடர்ந்து சுமார் 32,000க்கும் அதிகமான உயிரிழப்புகளுடன் ஜப்பான் இடம் பெற்றுள்ளது.
கிழக்கு மற்றும் வடகிழக்கு ஆசியாவில், முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள் ஆனது ஆண்டிற்கு 107.5 பில்லியன் முதல் 161.3 பில்லியன் டாலர் வரையிலான இழப்புகளைத் தடுக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளன.