அதிக வருமானம் மற்றும் செல்வச் சமத்துவமின்மை கொண்ட முன்னணி நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
ஆனால் பல பரிமாண வறுமையில் வாழும் மக்களின் பங்கு ஆனது, 2015-16 மற்றும் 2019-21 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இந்தியாவில், 2000 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், தனிநபர் வருமானம் ஆனது 442 டாலரிலிருந்து 2,389 டாலராக உயர்ந்துள்ளது.
அதேசமயம், 2004 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், வறுமை விகிதங்கள் ஆனது (ஒரு நாளைக்கு 2.15 டாலர்) 40 சதவீதத்தில் இருந்து 10 சதவிகிதம் ஆக சரிந்துள்ளன.
நாட்டின் மக்கள்தொகையில் 45 சதவீதத்தினர் மற்றும் 62 சதவீத ஏழைகளைக் கொண்ட மாநிலங்களில் வறுமை நிலை தொடர்ந்து அதிகரிக்கும் நிலையே காணப் படுகிறது.
உலக நடுத்தர வர்க்கத்தினரின் வளர்ச்சிக்கு (192 மில்லியன் மக்கள்) இந்தியா 24 சதவீதப் பங்களிப்பை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பிராந்தியத்தில் ஒரு நாளைக்கு 2.15 அமெரிக்க டாலர்களுக்கும் குறைவான வருமானம் பெறும் நிலையில், 185 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தீவிர வறுமை நிலையில் வாழ்கின்றனர்.