TNPSC Thervupettagam

ஆசிய – பசுபிக் பொருளாதார கூட்டுறவு

November 12 , 2017 2441 days 894 0
  • வியட்நாமில் உள்ள தனாங் (Danang) நகரில் ஆசிய – பசுபிக் பொருளாதார கூட்டுறவு அமைப்பின் உச்சி மாநாடு  (APEC 2017 – Asia – Pacific Economic Co-Operation) அண்மையில் நடைபெற்றது.
  • அமெரிக்காவின் விலகலைத் தொடர்ந்து, அமெரிக்கா இன்றி பசிபிக் நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்புக் கூட்டணி என்றழைக்கப்படும் ‘டிரான்ஸ் பசுபிக் பார்ட்னர் ஷிப்‘ என்ற (Trans-Pacific Partnership) வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்து செல்ல இம்மாநாட்டில் கலந்து கொண்ட 11 ஆசிய-பசிபிக் நாடுகளின் அமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர்.
  • APEC என்பது ஆசியா-பசிபிக் பிராந்தியம் முழுவதும் தடையற்ற வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட 21 பசிபிக் கரையோர நாடுகளுக்கான ஓர் மன்றமாகும்.
  • இதன் தலைமையகம் - சிங்கப்பூர்.
  • இந்தியா இந்த அமைப்பில் உறுப்பினர் அல்ல.
  • APECல் அதிகாரப்பூர்வ பார்வையாளர்கள் உள்ளனர். அவையாவன,
    • ஆசியான் நாடுகள் (ASEAN)
    • பசுபிக் தீவுகள் மன்றம் (Pacific Islands Forum)
    • பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு கவுன்சில் (Pacific Economic Cooperation Council)
  • ஆசியா-பசுபிக் பிராந்திய நாடுகளுக்கிடையே உட்-சார்புடைமைத் தன்மை மற்றும் பிராந்திய வர்த்தக கூட்டணிகள் உருவாதல் அதிகரிப்பதாலும், பெருகி வரும் ஜப்பானின் சக்தியை கலைப்பதற்காகவும் APEC அமைப்பு உருவாக்கப்பட்டது.
  • ஓர் நாட்டின் கீழான அங்கமாக இல்லாமல் தனித்த பொருளாதாரமுடைய ஓர் பகுதியாக இருக்க வேண்டும் என்பதே APEC-ல் உறுப்பினராக வேண்டிய தகுதியாகும். இதன் அடிப்படையிலேயே தைவான் உறுப்பினராக சேர்க்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்