வரலாற்றில் முதல் முறையாக, தன்னுடைய பளுதூக்குதல் போட்டிகளுக்கான பயணத்தில் 2019-ஆம் ஆண்டிற்கான, புகழ்பெற்ற ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியை (Asian Weightlifting Championship 2019) இந்தியா நடத்த உள்ளது.
இந்த 2019-ஆம் ஆண்டின் ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியானது 2020-ஆம் ஆண்டு, டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியின் பளுதூக்குதல் பிரிவிற்கான தகுதி தேர்ந்தெடுப்புப் போட்டியாகச் (Qualifying event) செயல்படும்.
ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியின் கடைசி பதிப்பு, துர்க்மெனிஸ்தான் நாட்டின் அஸ்காபாத் நகரத்தில் நடைபெற்றது.
உஸ்பெகிஸ்தான் நாட்டின் உர்கென்ச் நகரில் நடைபெற்ற ஆசிய பளுதூக்குதல் சம்மேளனத்தின் (Asian Weightlifting Federation) நிர்வாகிகள் குழுவினுடைய சந்திப்பு மற்றும் மாநாட்டில் 2019-ஆம் ஆண்டின் ஆசிய பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியை இந்தியாவில் நடத்த முடிவு எடுக்கப்பட்டது.