TNPSC Thervupettagam

ஆசிய பாமாயில் கூட்டணி

October 1 , 2022 786 days 451 0
  • இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து ஆசிய பாமாயில் கூட்டணியை (APOA) உருவாக்கியுள்ளன.
  • இந்தக் கூட்டணியின் முதல் பொதுக்குழுக் கூட்டமானது, இந்தியாவின் ஆக்ராவில் நடைபெற்ற உலக எண்ணெய் நிறுவன உச்சி மாநாட்டினை ஒட்டி நடத்தப் பட்டது.
  • அடுத்தக் கூட்டமானது அடுத்த ஆண்டான 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தோனேசியாவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • உலக எண்ணெய் நிறுவன உச்சி மாநாடு என்பது உலகின் முன்னணி சமையல் எண்ணெய்கள் மற்றும் வேளாண் வர்த்தக மாநாடு, கண்காட்சிகள் மற்றும் விருதுகளில் ஒன்றாகும்.
  • 2022 ஆம் ஆண்டானது உலக எண்ணெய் நிறுவன உச்சி மாநாட்டு அமைப்பின் 25வது ஆண்டு விழாக் கொண்டாட்டத்தையும் குறிக்கிறது.
  • இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகள் சேர்ந்து உலக பாமாயில் உற்பத்தியில் கிட்டத்தட்ட 90% பங்கு வகிக்கின்றன.
  • இந்தியா, சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இந்த எண்ணெய் பொருட்களின் சிறந்த நுகர்வு நாடுகளாக திகழ்கின்றன.
  • உலக இறக்குமதியில் 15% பங்கு வகிப்பதோடு, ஆசியாவிலேயே அதிக பாமாயிலை இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா திகழ்கிறது.
  • இந்தியாவைத் தொடர்ந்து சீனா (9%), பாகிஸ்தான் (4%) மற்றும் வங்காளதேசம் (2%) ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்