ஆசிய மற்றும் பசிபிக் பொருளாதாரம் மற்றும் சமூகம் ஆய்வு 2025
April 15 , 2025 5 days 49 0
ஐக்கிய நாடுகள் சபையின் ESCAP அமைப்பானது, 2025 ஆம் ஆண்டு ஆசிய மற்றும் பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆய்வறிக்கையினை வெளியிட்டுள்ளது.
இது ஆசிய-பசிபிக் பொருளாதாரங்கள், மிகத் தீவிரமடைந்து வரும் கடும் பருவநிலை நெருக்கடிகள் மற்றும் பசுமை மாற்றங்களுக்குப் போதுமான தயார்நிலையின்மை காரணமாக பெரும் பொருளாதார அளவிலான அபாயங்களை எதிர்கொள்கின்றன என்று எச்சரித்துள்ளது.
ஆசிய-பசிபிக் பகுதியைச் சேர்ந்த சில வளர்ந்து வளரும் பொருளாதாரங்கள், 2023 ஆம் ஆண்டில் இருந்த சுமார் 5.2 சதவிகிதத்தில் இருந்து சிறிது குறைந்து, 2024 ஆம் ஆண்டில் சராசரியாக 4.8 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளன.
பலவீனமான வெளிப்புறத் தேவைகள், பலவீனமானச் சந்தைச் சார்புகள் காரணமாக பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சி 2025-2026 ஆம் ஆண்டில் 4.4-4.5 சதவீதமாக குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கடும் பருவநிலை நெருக்கடிகள் ஆனது, சில ஆசிய-பசிபிக் நாடுகளில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு குறைந்த பட்சம் சுமார் 6% அளவிற்கு வருடாந்திரப் பொருளாதார இழப்பை ஏற்படுத்தலாம்.
பருவநிலை காரணமாக மிக அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகள் என அடையாளம் காணப் பட்ட 30 நாடுகளில் 11 நாடுகள் இப்பகுதியில் அமைந்துள்ளன.