TNPSC Thervupettagam

ஆசிய மேம்பாட்டு வங்கியின் 51-வது வருடாந்திர மாநாடு

May 9 , 2018 2392 days 739 0
  • பிலிப்பைன்ஸ் அரசு மணிலாவில் ஆசிய மேம்பாட்டு வங்கியின் 51-வது வருடாந்திர மாநாட்டை நடத்தியது.
  • 1966-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஆசிய மேம்பாட்டு வங்கி, வறுமை நிலையிலிருந்து மக்களை உயர்த்துவது (To lift people out of poverty) மற்றும் சமூகத்திற்கு அதிகளவில் பயனளிக்கும் திட்டங்களுக்கு நிதியளிப்பது ஆகியவற்றை கட்டாயமான ஒன்றாகக் கொண்டுள்ளது.

  • துவங்கிய காலம் முதல் வழக்கமாக (Conventionally) ஜப்பான் ஆளுநரால் தலைமையேற்கப்படும். இவ்வங்கிக்கு அதிகளவிலான நிதி ஜப்பான் மற்றும் அமெரிக்காவிடமிருந்து கிடைக்கப் பெறுகிறது.
  • ஆசிய மேம்பாட்டு வங்கியானது, ஆசியப் பகுதியைச்சேர்ந்த 48 நாடுகளுடன் சேர்த்து 67 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
  • ஆசிய மேம்பாட்டு வங்கியின் நிறுவன உறுப்பினரான இந்தியா, தற்போது நான்காவது மிகப்பெரிய பங்குதாரராக இருப்பதுடன், 2010-ஆம் ஆண்டிலிருந்து ஆசிய மேம்பாட்டு வங்கியின் மிகப்பெரிய கடன் பெறுநராகவும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்