தற்போது நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா முன்னெப்போதும் எட்டாத வகையில் 100 பதக்கங்களை வென்று ஒரு முக்கியமான சாதனையைப் படைத்துள்ளது.
இந்தியா இதுவரை 25 தங்கப் பதக்கங்கள், 35 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 40 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
இந்தியாவின் மகளிர் கபடி அணி சமீபத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சீன தைபே அணியினை வீழ்த்தி தங்கம் வென்றதன் மூலம் 100வது பதக்கம் என்ற இலக்கை எட்டியது.
தடகளம் (29 பதக்கங்கள்) மற்றும் துப்பாக்கி சுடுதல் (22) ஆகியவை இந்தியாவின் இந்தப் புகழ்மிக்க சதத்திற்கு மிகப்பெரியப் பங்களிப்பை அளித்துள்ளன.
ஒலிம்பிக், காமன்வெல்த் விளையாட்டு மற்றும் ஆசிய விளையாட்டு ஆகிய மூன்று பெரிய விளையாட்டுகளில் இந்தியா 100 பதக்கங்களுக்கு மேல் வென்றது இது இரண்டாவது முறையாகும்.
2010 ஆம் ஆண்டில் புது டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா 101 பதக்கங்களை வென்றிருந்தது.