அண்மைக்கால ஆய்வுகள் ஆனது, செந்நாய்களின் தினசரி செயல்பாடுகளானது சிறுத்தைகளின் இரைகளுக்கான அதிகளவு இடையீடுகளுடனும், படைச் சிறுத்தைகளின் இரைகளுக்கான குறைவான இடையீடுகளுடனும் இருப்பதாக வெளிப் படுத்தியது.
அசாம் மாநிலத்தின் மனாஸ் தேசியப் பூங்காவில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இரைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகளில் இடையீடுகள் அல்லது வாழ்விடப் பொருத்தம் ஆகியவற்றிற்கான இடையீடுகள் ஆனது செந்நாய்களுக்கும் புலிகளுக்கும் இடையேயான, இருவகையான மாமிச உண்ணிகளுக்கு இடையே சக வாழ்வு அல்லது கூட்டுறவு நடத்தைகளை ஏற்படுத்தும் வகையிலான ஒரு நேர்மறையான தொடர்பை ஏற்படுத்தக் கூடும் என்பதை இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.
ஒரே மாதிரியான அல்லது ஒன்றுடன் ஒன்று இடையிடும் வகையிலான புவியியல் பகுதிகளில் உள்ள விலங்குகள், தாவர இனங்கள் மற்றும் பிற இனங்கள் இணையுயிரி வாழ்விடம் என குறிப்பிடப் படுகிறது.
செந்நாய் அல்லது ஆசியக் காட்டு நாய் (குவோன் அல்பினஸ்) என்பது வெப்பமண்டல இந்தியக் காடுகளில் மட்டுமே உள்ள அழிந்து வரும் வனவாழ் நாய் இனமாகும்.
இந்த இனமானது அழிந்து போகும் அபாயத்தில் இருப்பதாகக் கருதப்படுகிறது.
உலகில் உள்ள இளம் வயது செந்நாய்களின் எண்ணிக்கையானது 949 மற்றும் 2,215க்கு இடைப்பட்ட எண்ணிக்கையில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அவை இந்தியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் உள்ளூர் பகுதிகளில் பரவிக் காணப் படுகின்றன.