ஆசியக் கால்பந்து கூட்டமைப்பின் (Asian Football Confederation - AFC) மகளிர் ஆசிய கோப்பை – 2022 என்ற போட்டியை நடத்தும் முதலாவது தெற்காசிய நாடாக இந்தியா பரிந்துரைக்கப் பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டில் AFC 16 வயதுக்குட்பட்டோர் சாம்பியன்ஷிப் போட்டியையும் 2017 ஆம் ஆண்டில் ஃபிஃபா 17 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை போட்டியையும் இந்தியா நடத்தியது.
இதற்கு முன்பு 1980 ஆம் ஆண்டில் AFC மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியை இந்தியா நடத்தியது.
இந்தப் போட்டியானது 2018 ஆம் ஆண்டில் ஜோர்டானில் விளையாடப்பட்டது. மேற்கு ஆசிய நாடு என்ற வகையில் முதல் முறையாக இந்தப் போட்டியை ஜோர்டான் நடத்தியது.