சமீபத்தில் இந்திய தேசிய விளையாட்டுகள் கூட்டமைப்பானது ஆசியக் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டி 2020 ஆம் ஆண்டில் நவம்பர் – டிசம்பர் மாதங்களில் நடத்தப் படும் என்று அறிவித்துள்ளது.
இந்தப் போட்டியை நடத்தும் நகரமானது இந்தியக் குத்துச் சண்டைக் கூட்டமைப்பினால் (BFI - Boxing Federation of India) தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றது.
இந்தப் போட்டியானது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப் படுகின்றது. ஆனால் ஆரம்பத்தில் இது தொடர்ச்சியான ஆண்டுகளில் நடத்தப்பட்டது.
BFI என்பது இந்தியாவில் ஒலிம்பிக் குத்துச் சண்டைக்கான நிர்வாக அமைப்பாகும்.
இது சர்வதேசக் குத்துச் சண்டைக் கூட்டமைப்பில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றது.