TNPSC Thervupettagam

ஆசியச் சமூகத்தின் “மாற்றியமைப்பதில் பெரும் பங்களிப்பை ஆற்றியோருக்கான” விருதுகள் - இமயமலையின் குங்பூ பெண் துறவிகள்

November 13 , 2019 1720 days 537 0
  • புது தில்லியில் குங்பூ பெண் துறவிகளை மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) பிரஹலாத் சிங் படேல் பாராட்டினார்.
  • ட்ருக்பா சமூகத்தின் பெண் துறவிகள், சமீபத்தில் நியூயார்க்கில் ஆசியச் சமூகத்தின் மதிப்புமிக்க “மாற்றியமைப்பதில் பெரும் பங்களிப்பை ஆற்றியோருக்கான” (game changer) விருதைப் பெற்றனர்.
  • இமயமலையில் உள்ள பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காகவும் பாலின நிலைப்பாடுகளை அகற்றுவதற்காகவும் அவர்கள் ஆற்றிய பெரும் பணிக்காக அவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
  • 700 நபர்களைக் கொண்ட ஒரு வலிமையான குங்பூ பெண் துறவிகள் சமுதாயமானது ட்ருக்பா வம்சாவளியைச் சேர்ந்ததாகும். இந்த வம்சமானது இமயமலையில் உருவாகிய, ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு புத்த மரபாகும்.

இந்த விருது பற்றி

  • ஆசியச் சமூகமானது உலகளாவிய சூழலில் ஆசியா மற்றும் அமெரிக்கா ஆகியவற்றைச் சேர்ந்த மக்கள், தலைவர்கள் மற்றும் நிறுவனங்களிடையே பரஸ்பர புரிந்துணர்வை ஊக்குவிப்பதற்காகவும் பங்களிப்புகளை வலுப்படுத்துவதற்காகவும் அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.
  • இது 1956 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்