TNPSC Thervupettagam

ஆசியச் சிங்கங்களின் இடமாற்றம்

March 23 , 2023 485 days 298 0
  • 40 முதிர் இளம் மற்றும் இளம் வயது சிங்கங்களைப் பர்தா என்ற வனவிலங்குச் சரணாலயத்திற்கு இடமாற்றம் செய்ய குஜராத் அரசு திட்டமிட்டுள்ளது.
  • பர்தா சரணாலயம் ஆனது, கிர் தேசியப் பூங்காவிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
  • ஆசியச் சிங்கங்களுக்கு வாழிடமளிக்கும் வகையில் அமைந்த இடமாக இது அடையாளம் காணப்பட்டுள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட முந்தையக் கணக்கெடுப்பின்படி, மாநிலத்தில் 674 சிங்கங்கள் உள்ள நிலையில் கிர் தேசியப் பூங்காவில் நீண்ட காலமாக இந்தப் பெரும் பூனை இனங்கள் அளவிற்கு அதிகமாக காணப்படுகின்றன.
  • 2013 ஆம் ஆண்டில், இந்திய உச்ச நீதிமன்றம் ஆனது, நோய் அல்லது வேறு ஏதேனும் பேரழிவுகள் காரணமாக ஒட்டு மொத்தச் சிங்கங்களும் அழிந்து விடும் வாய்ப்பைத் தவிர்க்கும் விதமாக சில சிங்கங்களை மத்தியப் பிரதேசத்திற்கு இடம் மாற்ற உத்தரவிட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்