2023 ஆம் ஆண்டு ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கடந்த ஐந்து நாட்களில் இந்திய அணி 6 தங்கம், 12 வெள்ளி மற்றும் ஒன்பது வெண்கலம் என 27 பதக்கங்களை வென்றுள்ளது.
வென்றப் பதக்கங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், வெளிநாடுகளில் நடந்தப் போட்டிகளில் இந்திய அணியின் சிறந்தப் பங்கேற்பு இதுவாகும்.
ஜப்பான் 16 தங்கப் பதக்கங்கள் உட்பட 37 பதக்கங்களுடன் முதலிடத்தைப் பெற்று உள்ளது.
சீனா 8 தங்கப் பதக்கங்கள் உட்பட 22 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.
இதில் இந்தியா மூன்றாவது இடத்தினையும், இலங்கை 4வது இடத்தினையும் பெற்றன.
ஜோதி யர்ராஜி மற்றும் பருல் சௌத்ரி ஆகியோர் இதில் இரண்டு போட்டிகளில் பதக்கங்களை வென்றனர்.