TNPSC Thervupettagam

ஆசியத் தேநீர் கூட்டிணைவு

April 20 , 2019 2050 days 607 0
  • தேநீர் வளர்ப்பு மற்றும் நுகர்வில் முன்னணியில் இருக்கும் 5 நாடுகளின் ஒரு ஒன்றியமான “ஆசியத் தேநீர் கூட்டிணைவானது” (Asian Tea Alliance - ATA) சீனாவின் கியூசோவில் தொடங்கப்பட்டுள்ளது.
  • இந்தியத் தேநீர் மன்றம், சீனத் தேநீர் சந்தையிடல் மன்றம், இந்தோனேஷியத் தேநீர் சந்தையிடல் மன்றம், இலங்கைத் தேநீர் வாரியம் மற்றும் ஜப்பான் தேநீர் மன்றம் ஆகியவை இதன் உறுப்பு நாடுகளாகும்.
  • உலகத் தேநீர் நுகர்வை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்தக் கூட்டிணைவு ஏற்படுத்தப்பட்டது. இது ஆசியத் தேநீரின் எதிர் காலத்திற்கான ஒரு நிலையான திட்டத்தை உருவாக்கும்.
  • தேநீர் உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இந்தியா (முதலில் சீனா) உள்ளது.
  • உலகில் தேநீர் நுகர்வில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
  • இந்தியாவில் தமிழ்நாடு மாநிலமானது தேநீர் உற்பத்தியில் மூன்றாவது மிகப்பெரிய மாநிலமாக விளங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்