கஜகஸ்தான் நாட்டில் நடைபெற்ற ஆசிய கை மல்யுத்தம் சாம்பியன்ஷிப் (Asian Arm wrestling Championship) போட்டியில் மாற்றுத் திறனாளியான இந்திய கை மல்யுத்த வீரரான ஸ்ரீமன்த்ஜா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
இந்தப் போட்டியில், 80 கிலோ எடைப்பிரிவில் தஜிகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பிருஜ் தங்கப் பதக்கத்தையும், மங்கோலியாவின் முன்க்போல்ட் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.
மேலும் ஸ்ரீமன்த்ஜா போலந்து நாட்டில் நடைபெற்ற பாரா-கை மல்யுத்தப் உலகப் கோப்பை போட்டியில் (Para-Arm Wrestling World Cup) 80 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.