இந்தியாவைச் சேர்ந்த “ஜக்ரிதி யாத்ரா” அறக்கட்டளை தன்னுடைய சிறப்பான செயல்பாட்டிற்காக, இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் நடைபெற்ற 3-வது வருடாந்திர ஆசியன் வாய்ஸ் அறக்கட்டளை விருதுகள் – 2018-ல் அறக்கட்டளை தெளிவுடைமையின் விருதினை (Charity Clarity Award) வென்றுள்ளது.
ஜக்ரிதி யாத்ரா அறக்கட்டளையானது ஒவ்வொரு ஆண்டும், 800 கி.மீ. தூரத்திலான 15 நாட்கள் அளவிலான நீண்ட இரயில் பயணத்தை ஏற்பாடு செய்யும். இப்பயணத்திற்கு இந்தியா முழுவதிலுமிருந்து நானூறு இளைஞர்கள் அனுமதிக்கப்படுவர். நிறுவனங்கள் மூலமாக சிறு நகரங்கள் மற்றும் கிராமங்கள் கொண்ட இந்தியாவை உருவாக்கவும் இளைஞர்கள் அதனைப் புரிந்து கொள்ளவும் இந்த ஏற்பாடானது செய்யப்படுகிறது.
இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியானது, இங்கிலாந்தின் மிகப்பழமையான ஆசியாவிலிருந்து சென்ற பதிப்பகமான “ஆசியன் வாய்ஸ்” மற்றும் ஐரோப்பாவின் முதல் சுதந்திர அறக்கட்டளையான தெளிவுடைமை அறக்கட்டளை ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கிடையில், Cleft Lip and Palate Association’ (“கிலெஃப்ட் லிப் மற்றும் பலேட் சங்கம்”), இந்த ஆண்டிற்கான அறக்கட்டளை விருதையும், “Road to Freedom” (விடுதலைக்கான பாதை) நிறுவனம் இந்த ஆண்டிற்கான ஸ்டார்ட்-அப் விருதையும் வென்றுள்ளன.
இந்த விருதுகள், தற்போதைய காலத்தில் மிகவும் அச்சுறுத்தும் சமூகப் பிரச்சினைகளாக தங்கள் பார்வையில் பெரிதாக நினைத்து அதை சரி செய்ய நினைக்கும் அறக்கட்டளைகளுக்கு மதிப்பளிப்பதற்காக இங்கிலாந்திலும் உலக அளவிலும் கொடுக்கப் படுவதாகும்.