ஆசிய மேம்பாட்டு வங்கியானது, அதன் சமீபத்திய ஆசிய-பசிபிக் பருவநிலை என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
புதைபடிவ எரிபொருட்களிலிருந்து தூய்மை எரிசக்தித் துறைக்கு மாறுவதற்கான பெரிய மாற்றத்தில் இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளை இது எடுத்துக்காட்டுகிறது.
இந்தியாவின் சீர்திருத்தங்கள் ஆனது, புதைபடிவ எரிபொருள் மானியங்களை 85% குறைக்க வழிவகுத்தது என்பதோடு 2013 ஆம் ஆண்டில் 25 பில்லியன் டாலரில் இருந்த இந்த மானியமானது 2023 ஆம் ஆண்டில் 3.5 பில்லியனாக குறைந்தது.
தூய்மை எரிசக்தித் திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக 2010 முதல் 2017 ஆம் ஆண்டு வரை நிலக்கரி உற்பத்தி மீதான வீத வரியை இந்தியா அமல்படுத்தியது.
ஆனால் நிலக்கரி வீத வரியானது 2017 ஆம் ஆண்டிற்குப் பிறகு சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடாக மாற்றப்பட்டது.
பல்வேறு சீர்திருத்தங்கள் தற்போது இருந்த போதிலும், புதைபடிவ எரிபொருள்கள் ஆனது இன்றும் இந்தியாவின் ஆற்றல் நுகர்வில் குறிப்பிடத்தக்கப் பங்கைக் கொண்டு உள்ளன.