TNPSC Thervupettagam

ஆசியா-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) மாநாடு

November 24 , 2020 1379 days 554 0
  • இந்த மாநாட்டின் போது போகர் இலக்குகளுக்கு (Bogor Goals) மாற்றாக புதிய 20 ஆண்டு கால வளர்ச்சிக்கான ஒரு தொலைநோக்குப் பார்வையான ‘புட்ராஜ்ஜியா தொலைநோக்குப் பார்வை – 2040 (Putrajaya Vision 2040)’ என்ற ஒரு கொள்கை ஆனது ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • இந்தக் காணொலி வாயிலான மாநாட்டிற்குப் பிறகு APEC  தலைவர்கள் கோலாலம்பூர் பிரகடனத்தை வெளியிட்டுள்ளனர்.
  • 2020 ஆம் ஆண்டில் இந்த மாநாடானது மலேசியாவினால் நடத்தப்பட்டது.
  • இந்த மாநாட்டின் அதிகாரப்பூர்வக் கருத்துரு “பகிரப்பட்ட வாய்ப்புகளின் மீதான செழுமையான எதிர்காலத்தை நோக்கி மனிதர்களின் சாத்தியக் கூறுகளை மேம்படுத்துதல் : ஒரு முன்னிலை மற்றும் முன்னுரிமைச் செயல்பாடு” என்பதாகும்.
  • APEC என்பது பசிபிக் பகுதியில் உள்ள 21 உறுப்பினர் பொருளாதார நாடுகளைக் கொண்ட அரசாங்கங்களுக்கிடையேயான ஒரு மன்றமாகும். இது ஆசியா-பசிபிக் பகுதி முழுவதும் தடையற்ற வர்த்தகத்தை ஊக்குவிக்கின்றது.
  • APEC ஆனது சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு 1989 ஆம் ஆண்டில்  தொடங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்