இது ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளுக்கான ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தினால் (ESCAP) வெளியிடப்பட்டது.
2024 ஆம் ஆண்டில் சுமார் 54 சதவீதக் குறிகாட்டிகள் ஆனது குறைந்தது இரண்டு தரவு புள்ளிகளைக் கொண்டுள்ளதுடன் ஆசியா மற்றும் பசிபிக் நாடுகள் நீடித்த நிலையான மேம்பாட்டு இலக்குகளில் முன்னேற்றம் அடைந்துள்ளது.
மிகக் குறிப்பாக வயது, உடல் குறைபாடு, பாலினம் மற்றும் இருப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட தரவு தொடர்பாக குறிப்பிடத்தக்க சில இடைவெளிகள் உள்ளன.
17 நிலையான மேம்பாட்டு இலக்குகள் (SDGs) ஆனது, 2030 ஆம் ஆண்டிற்குள் அடையப் பட வேண்டுமானால் அவசர நடவடிக்கை தேவை என்று இந்த அறிக்கை எச்சரித்தது.