TNPSC Thervupettagam

ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான புதிய தலைமைப் பிரதிநிதி - BIS

November 19 , 2018 2117 days 594 0
  • சர்வதேச தீர்வுகளுக்கான பன்னாட்டு வங்கியானது (BIS - Bank for International Settlements) சித்தார்த் திவாரியை ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான தலைமைப் பிரதிநிதியாக நியமித்துள்ளது. இதற்குமுன் எலி ரிமோலோனா இப்பதவியை வகித்தார்.
  • ஹாங்காங்கின் சிறப்பு நிர்வாகப் பகுதியில் உள்ள BIS-ன் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான அலுவலகத்தில் சித்தார்த் பணியாற்றுகிறார்.
  • இவர் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் உள்ள மத்திய வங்கிகள் மற்றும் சர்வதேச தீர்வுகளுக்கான பன்னாட்டு வங்கி ஆகியவற்றிற்கு இடையே ஒத்துழைப்பை அதிகப்படுத்த பணியாற்றவிருக்கிறார்.
  • BIS என்பது சர்வதேச நாணய மற்றும் நிதியியல் ஒத்துழைப்பை ஏற்படுத்த மத்திய வங்கிகளால் நிர்வகிக்கப்படும் சர்வதேச நிதியியல் நிறுவனமாகும். மேலும் BIS ஆனது மத்திய வங்கிகளுக்கு வங்கியாக செயல்படுகிறது.
  • இது சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்