TNPSC Thervupettagam

ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியங்களில் கோவிட் – 19 காரணமாக ஏற்படும் இளைஞர் வேலைவாய்ப்புப் பிரச்சினைகளைக் கையாளுதல்

August 27 , 2020 1423 days 582 0
  • இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில், அதாவது இந்த ஆண்டின் ஆறு மாதக் காலத்தில், 15 - 24 வயதிற்குட்பட்ட 6.1 மில்லியன் இளைஞர்கள் வேலையிழப்பார்கள்.
  • இது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் ஏற்பட இருக்கும் மொத்த வேலையிழப்பில் 40% வேலையிழப்பாகக் கணிக்கப் பட்டுள்ளது.
  • இந்தியாவிற்கு அடுத்து பாகிஸ்தானில் ஏறத்தாழ 2.3 மில்லியன் இளைஞர்கள் தங்களது வேலையை இழக்க நேரிடுவர். இந்தோனேசியாவில் ஏறத்தாழ 1.9 மில்லியன் இளைஞர்கள் வேலையிழக்க நேரிடுவர்.
  • இந்தியாவில் இளைஞர் வேலைவாய்ப்பின்மை விகிதமானது 32.5% என்ற அளவை  நெருங்க உள்ளது. இப்பிராந்தியத்தில் உள்ள 13 நாடுகளிடையே இது மூன்றாவது மிகப்பெரிய வேலைவாய்ப்பின்மை விகிதம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • இலங்கை (37.8%) மற்றும் பிஜி (38.85) ஆகியவை மட்டுமே இந்தியாவை விட மிக அதிகமான அளவில் இளைஞர் வேலைவாய்ப்பின்மை விகிதத்தைக் கொண்டு உள்ளன.
  • இந்த அறிக்கையானது ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு ஆகியவற்றினால் கூட்டாக வெளியிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்