ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான துணை அறிக்கை
October 12 , 2024 71 days 123 0
சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) ஆனது இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
‘2024-26 ஆம் ஆண்டிற்கான உலகச் சமூகப் பாதுகாப்பு அறிக்கையின் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான துணை அறிக்கை: பருவநிலை நடவடிக்கைக்கான ஒரு உலகளாவியச் சமூகப் பாதுகாப்பு மற்றும் ஒரு சரியான மாற்றம்’ என்ற தலைப்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சுமார் 2.1 பில்லியன் மக்கள் பல்வேறு வாழ்க்கைச் சுழற்சி மற்றும் சமூகப் பொருளாதார அபாயங்களில் இருந்து இன்னும் பாதுகாப்பு பெறாத நிலையிலேயே உள்ளனர்.
2015 ஆம் ஆண்டு முதல் தெற்காசியாவில் சமூகப் பாதுகாப்புத் திட்டப் பயன் பரவல் விகிதம் 16.7 சதவீத புள்ளிகள் (18.7 முதல் 35.4%) ஆகும்.
வங்காளதேசம், சீனா, இந்தியா, இந்தோனேஷியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய ஐந்து அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் முறையே 22%, 75.6%, 48.4%, 54.3% மற்றும் 20.2% என்ற பரவல் விகிதங்களைக் கொண்டுள்ளன.
வேலை வாய்ப்பின்மை காப்பீட்டுத் திட்டங்கள் இந்தியாவிலும் ஈரானிலும் வழங்கப் படுகின்றன, ஆனால் அவற்றின் பரவல் குறைவாகவே உள்ளது.
இந்தியாவில், வேலைவாய்ப்பின்மை காப்பீடு ஆனது உழைக்கும் வயதுடைய மக்கள் தொகையில் 11.5% பேருக்கு மட்டுமே சட்டப் பூர்வமாக கிடைக்கப் பெற்றுள்ளது.