TNPSC Thervupettagam

ஆசியா மற்றும் பசிபிக்கில் மணல் மற்றும் தூசிப் புயல்கள் போன்ற ஆபத்துகள் மீதான மதிப்பீடு

September 11 , 2021 1045 days 505 0
  • இந்தக் கண்டுபிடிப்புகள் 'ஆசிய மற்றும் பசிபிக் பேரிடர் தகவல் மேலாண்மை மேம்பாட்டு' அறிக்கையில் வெளியிடப்பட்டன.
  • ஆசிய மற்றும் பசிபிக் பேரிடர் தகவல் மேலாண்மை மேம்பாட்டு அமைப்பு என்பது ஐக்கிய நாடுகளின் ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்திற்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் ஒரு பிராந்திய நிறுவனமாகும்.
  • இந்த அறிக்கையானது 'கிழக்கு மற்றும் வடகிழக்கு ஆசியா', 'தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியா', 'மத்திய ஆசியா' மற்றும் 'பசிபிக்' ஆகியவை ஆசியா-பசிபிக்கின் நான்கு முக்கிய மணல் மற்றும் தூசி புயல் உருவாகும் இடங்களாக அடையாளம் கண்டுள்ளது.
  • இப்பகுதி கனிமத் தூசியை வெளியிடுவதில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • மணல் மற்றும் தூசிப் புயல்கள் தென்மேற்கு ஆசியாவில் (கராச்சி, லாகூர் மற்றும் டெல்லி) மோசமான காற்றின் தரத்திற்கு கணிசமாகப் பங்களிக்கின்றன.
  • மணல் மற்றும் தூசிப் புயல்கள் ஒரு எல்லை தாண்டிய வானிலைப் பேரிடராகும்.
  • இந்த தூசியின் பெரும்பகுதி அதிக உப்பைக் கொண்டுள்ளதால், இது தாவரங்களுக்கு நச்சுத் தன்மையை ஏற்படுத்துகிறது.
  • இது மகசூலைக் குறைப்பதோடு, பருத்தி மற்றும் பிற பயிர்களின் உற்பத்திக்குக் குறிப்பிடத் தக்க அச்சுறுத்தலாகவும் உள்ளது.
  • இந்தியாவில் 500 மில்லியனுக்கும் அதிகமான மக்களும், துர்க்மெனிஸ்தான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் ஈரான் இஸ்லாமியக் குடியரசு ஆகிய நாடுகளின் மொத்த மக்கள்தொகையில் 80 சதவீதத்திற்கும் அதிகமான மக்களும் மணல் மற்றும் தூசிப் புயல்களால் நடுத்தர மற்றும் மிகக் குறைந்த தரம் கொண்ட காற்றைச் சுவாசிப்பதற்கு உள்ளாக்கப் பட்டுள்ளனர்.
  • இமயமலை-இந்து குஷ் மலைத்தொடர் மற்றும் திபெத்தியப் பீடபூமி ஆகிய பகுதிகளில் அதிக தூசி படிதல் நிகழ்வும் ஏற்படுகிறது.
  • ஆசியாவில் 1.3 பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு நன்னீர் ஆதாரமாக இருக்கும் இந்தப் பீடபூமி 'மூன்றாவது துருவம்' என்று அழைக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்