ஆசியான் அமைப்பின் 2023 ஆம் ஆண்டிற்கான தலைமைப் பொறுப்பினை வகிக்கும், இந்தோனேசியா ஜகார்த்தா நகரில் அதன் 43வது உச்சிமாநாட்டினை நடத்தியது.
இது ஒற்றுமை மற்றும் கலாச்சாரக் கொண்டாட்டத்தினைக் குறிக்கும் வகையில் தொடங்கப் பட்டது.
இந்த ஆண்டு, "ஆசியான் விவகாரங்கள்: வளர்ச்சியின் மையம்" என்ற கருத்துருவுடன் இந்த அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தோனேஷியா ஏற்றது.
ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு ஆசியான் நாடுகளை ஊக்குவிப்பதன் மூலம், உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியின் மையமாக இந்தப் பிராந்தியம் திகழ்ந்து வரும் நிலையைத் தக்க வைத்துக் கொள்வதை இந்தோனேஷியா நாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.