TNPSC Thervupettagam

ஆசியான் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் சந்திப்பு – ப்ளஸ்

December 2 , 2020 1373 days 569 0
  • வியட்நாம் ஆனது ஆசியான் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் சந்திப்பு – ப்ளஸ் (ASEAN Defence Ministers’ Meeting Plus ADMM Plus) என்ற  நிகழ்விற்கு இந்தியாவை அழைத்துள்ளது.
  • இது 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வியட்நாம் நாட்டினால் நடத்தப்பட உள்ளது.
  • ADMM-Plus என்பது ஆசியான் மற்றும் அதன் 8 உரையாடல் பங்காளர்களுக்கான ஒரு தளமாகும்.
  • 2007 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் நடைபெற்ற 2வது ADMM ஆனது ADMM-Plus அமைப்பை ஏற்படுத்துவதற்கான ஒரு கருத்தாக்க ஆவணத்தை ஏற்றுக் கொண்டது.
  • இது இப்பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டிற்காக வேண்டி  பாதுகாப்பு சார்ந்த ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான், நியூசிலாந்து, கொரியக் குடியரசு, ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகியவை இந்த 8 உரையாடல் பங்காளர்களாகும்.
  • இவை ஒட்டுமொத்தமாகப்ளஸ் நாடுகள்எனப்படும்.
  • கடல்சார்  பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு, மனிதாபிமான உதவி  & பேரிடர் நிவாரணம், அமைதி நடவடிக்கைகள் மற்றும் இராணுவ மருத்துவம் ஆகியவை இந்த செயல்முறையின் கீழ் ஒப்புக் கொள்ளப்பட்ட 5 நடைமுறை ஒத்துழைப்புப் பகுதிகள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்