ஆற்றல் தேவையைக் குறைக்கவும் அவசர கால காப்பு ஆற்றலை இரயில்களுக்கு வழங்கவும் ஜப்பானின் ஒசாகா இரயில் நிலையத்தில் ஆசியாவின் மிகப்பெரிய ஆற்றல் சேமிப்பு அமைப்பு ஒன்றை டெஸ்லா நிறுவனமானது உருவாக்கியுள்ளது.
இது ஜப்பானின் ஒசாகாவின் இரயில் சேவையை இயக்கும் நிறுவனமான கின் டெட்சுவுடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ளது.
இந்த 7 மெகாவாட் - மணிநேர அமைப்பானது ஆசியாவின் மிகப்பெரிய ஆற்றல் சேமிப்புத் திட்டம் மட்டுமல்லாமல் ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நான்காவது மிகப் பெரிய சேமிப்புத் திட்டமுமாக உள்ளது.