2024 ஆம் ஆண்டில் கொல்கத்தா நகரானது உலகின் இரண்டாவது மிகவும் நெரிசலான நகரமாகவும், ஆசியாவின் மிகவும் நெரிசலான நகரமாகவும் இருந்தது.
இந்த நகரத்தில் வாகன ஓட்டுநர்கள் 10 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க சராசரியாக 34 நிமிடங்கள் 33 வினாடிகள் செலவிட்டுள்ளனர்.
இதில் கொல்கத்தாவைத் தொடர்ந்து பெங்களூரு இடம் பெற்றுள்ளது என்ற நிலையில் இந்த நகரத்தில் வாகன ஓட்டுநர்கள் 10 கி.மீ தூரம் கடக்க 34 நிமிடங்கள் 10 வினாடிகள் செலவிட்டுள்ளனர்.
கொல்கத்தாவில் போக்குவரத்து நிலைமைகள் காரணமாக ஆண்டிற்கு சுமார் 110 மணி நேரம் இழப்பு பதிவாகியுள்ளது என்ற நிலையில் பெங்களூருவில் 117 மணி நேரமும், புனேவில் 108 மணிநேரமும், ஐதராபாத்தில் 85 மணிநேரமும் இழக்கப் பட்டு உள்ளன.
அதே தூரத்தினைக் கடப்பதற்கு 33 நிமிடங்கள் 22 வினாடிகள் பயண நேரத்துடன் புனே இதில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது, இதனால் உலகின் நெரிசல் மிக்க முதல் ஐந்து இடங்களில் மூன்று இந்திய நகரங்கள் இடம் பிடித்துள்ளன.
கொலம்பியா நாட்டின் பாரன்குவிலா நகரம் (36 நிமிடங்கள், ஆறு வினாடிகள்) முதல் இடத்தையும், இலண்டன் (33 நிமிடங்கள், 17 வினாடிகள்) இந்தத் தரவரிசையில் முதல் ஐந்து இடங்களில் இடம் பிடித்துள்ளன.