TNPSC Thervupettagam

ஆசியாவின் மிகவும் நெரிசலான நகரம் 2024

January 14 , 2025 8 days 84 0
  • 2024 ஆம் ஆண்டில் கொல்கத்தா நகரானது உலகின் இரண்டாவது மிகவும் நெரிசலான நகரமாகவும், ஆசியாவின் மிகவும் நெரிசலான நகரமாகவும் இருந்தது.
  • இந்த நகரத்தில் வாகன ஓட்டுநர்கள் 10 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க சராசரியாக 34 நிமிடங்கள் 33 வினாடிகள் செலவிட்டுள்ளனர்.
  • இதில் கொல்கத்தாவைத் தொடர்ந்து பெங்களூரு இடம் பெற்றுள்ளது என்ற நிலையில் இந்த நகரத்தில் வாகன ஓட்டுநர்கள் 10 கி.மீ தூரம் கடக்க 34 நிமிடங்கள் 10 வினாடிகள் செலவிட்டுள்ளனர்.
  • கொல்கத்தாவில் போக்குவரத்து நிலைமைகள் காரணமாக ஆண்டிற்கு சுமார் 110 மணி நேரம் இழப்பு பதிவாகியுள்ளது என்ற நிலையில் பெங்களூருவில் 117 மணி நேரமும், புனேவில் 108 மணிநேரமும், ஐதராபாத்தில் 85 மணிநேரமும் இழக்கப் பட்டு உள்ளன.
  • அதே தூரத்தினைக் கடப்பதற்கு 33 நிமிடங்கள் 22 வினாடிகள் பயண நேரத்துடன் புனே இதில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது, இதனால் உலகின் நெரிசல் மிக்க முதல் ஐந்து இடங்களில் மூன்று இந்திய நகரங்கள் இடம் பிடித்துள்ளன.
  • கொலம்பியா நாட்டின் பாரன்குவிலா நகரம் (36 நிமிடங்கள், ஆறு வினாடிகள்) முதல் இடத்தையும், இலண்டன் (33 நிமிடங்கள், 17 வினாடிகள்) இந்தத் தரவரிசையில் முதல் ஐந்து இடங்களில் இடம் பிடித்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்