TNPSC Thervupettagam

ஆசியாவின் முதல் ஓங்கில் (டால்பின்) ஆராய்ச்சி மையம்

October 7 , 2018 2242 days 1900 0
  • பீகாரின் தலைநகரான பாட்னாவில், பாட்னா பல்கலைக்கழக வளாகத்தில் கங்கை ஆற்றின் கரைப்பகுதியில் தேசிய ஓங்கில் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படவுள்ளது.
  • இது ஆசியாவின் முதலாவது ஓங்கில் ஆராய்ச்சி மையமாக அமையவுள்ளது.
  • பீகாரில் கடந்த அக்டோபர் 05ல் அனுசரிக்கப்பட்ட ஓங்கில் தினத்தன்று இந்த மையத்தின் அமைப்பிறகான அறிவிப்பானது வெளியிடப்பட்டது.

கங்கை நதி வாழ் ஓங்கில்

  • கங்கை நதி வாழ் ஓங்கிலானது (அறிவியல் பெயர்: பிளாட்டனிஸ்டா கஞ்செட்டிகா) உலகில் உள்ள நான்கு நன்னீர் ஓங்கில் இனங்களில் ஒன்றாகும்.
  • மற்று மூன்று இனங்களானது யாங்சீ ஆறு, பாகிஸ்தானின் சிந்து நதி மற்றும் அமேசான் ஆறுகளில் காணப்படுகிறன. கங்கை நதி வாழ் ஓங்கிலானது இந்தியா, வங்காளதேசம் மற்றும் நேபாளத்தில் காணப்படுகின்றன.
  • கங்கை நதி வாழ் ஓங்கிலானது இந்தியாவின் தேசிய நீர்வாழ் விலங்கு ஆகும்.
  • கங்கை நதி வாழ் ஓங்கிலானது இந்திய வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் 1 வது அட்டவணையின் கீழ் வைக்கப்பட்டுள்ளது. மேலும் IUCN (International Union for Conservation of Nature) -ஆல் அருகிவரும் இனமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • பீகாரில் பாகல்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள விக்ரமஷீலா கங்கை வாழ் ஓங்கில் சரணாலயமானது இந்தியாவில் அமைந்துள்ள ஒரே ஓங்கில் சரணாலயமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்